மற்ற செய்திகள்

அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உடற்கூறாய்வு மைய ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய‌ மை தருமபுரி அமைப்பினர்

அக்டோபர் 17|புரட்டாசி 31

தருமபுரி,


“மை தருமபுரி”  அமைப்பின் சார்பாக தித்திக்கும் தீபாவளி திருநாள் விழாவையொட்டி ஏழ்மையில் இருப்போர், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உடற்கூறாய்வு மையத்தில் பணி செய்யும் ஊழியர்கள் என 20 நபர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்விற்கு எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் தண்டபாணி, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சண்முகம், தன்னார்வலர்கள் கணேஷ், காதர் ஆகியோர் புத்தாடைகள் வழங்கி தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

# மை தருமபுரி 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks