மற்ற செய்திகள்

ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான் ” இன்னர் வீல் கிளப் மகளிர் பங்கேற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்..

 அக்டோபர் 30|ஐப்பசி 13

இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் ( INNER WHEEL CLUB OF RANIPET) சார்பில், “ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்” (RANIPET SAREE WALKATHON) என்ற பெயரில் போதைப் பொருளுக்கு  எதிரான விழிப்புணர்வு நடையை புதன்கிழமை நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய “ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான் ” விழிப்புணர்வு நடையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இதில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள், ரோட்டரி  சங்க நிர்வாகிகள், வாலாஜா  மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள்,தனியார் பள்ளி  மாணவிகள்  உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர்  நமது பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு  எதிரான விழிப்புணர்வு  பதாகைகளை கையில்  ஏந்தி முக்கிய  வீதிகள்  வழியாக  சுமார்  ஒன்றரை  கிலோ  மீட்டர்  வரை  நடைபயணமாக சென்று  ராணிப்பேட்டை  அரசு  மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில்  நிறைவு  செய்தனர்.இந்த  விழிப்புணர்வு நடையில் பங்கேற்ற  அனைவருக்கும்  சான்றிதழ்  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் தலைவர் பிரியா வினு, செயலாளர் அமலா அரவிந்த்,பொருளாளர் அஸ்வினி கணேஷ், ஜி.கே.குழுமம் ஷீலா வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் இன்னர் வீல் கிளப்  நிர்வாகிகள் பள்ளிக், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் ( INNER WHEEL CLUB OF RANIPET) சார்பில், “ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்” (RANIPET SAREE WALKATHON) என்ற பெயரில் போதைப் பொருளுக்கு  எதிரான விழிப்புணர்வு நடையை புதன்கிழமை நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய “ராணிப்பேட்டை சேலை வாக்கத்தான்” விழிப்புணர்வு நடையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இதில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் ரோட்டரி  சங்க நிர்வாகிகள், வாலாஜா  மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் தனியார் பள்ளி  மாணவிகள்  உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர்  நமது பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு  எதிரான விழிப்புணர்வு  பதாகைகளை கையில்  ஏந்தி முக்கிய  வீதிகள்  வழியாக  சுமார்  ஒன்றரை  கிலோ  மீட்டர்  வரை  நடைபயணமாக சென்று  ராணிப்பேட்டை  அரசு  மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில்  நிறைவு  செய்தனர்.இந்த  விழிப்புணர்வு நடையில் பங்கேற்ற  அனைவருக்கும்  சான்றிதழ்  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை இன்னர் வீல் கிளப் தலைவர் பிரியா வினு, செயலாளர் அமலா அரவிந்த்,பொருளாளர் அஸ்வினி கணேஷ், ஜி.கே.குழுமம் ஷீலா வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் இன்னர் வீல் கிளப்  நிர்வாகிகள் பள்ளிக், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks