தருமபுரிமாவட்ட செய்திகள்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கவனத்திற்கு – சமூக ஆர்வலர் பா.ஜெபசிங் வேண்டுகோள்..
பிப்ரவரி 21|மாசி 09
பொம்மிடி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கவனத்திற்கு ….
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் / கட்சியினர் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பது இயல்புதான், ஆனால் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி பகுதி வாக்காள பெருமக்கள் கீழ்கண்ட உறுதிமொழி பத்திரத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடத்தில் இவைகளையெல்லாம் நிறைவேற்றி தருவேன் என்று கையொப்பமிட்டு கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் என கோரிக்கை வையுங்கள். எத்தனை வருடம் தான் ஏமாந்து கொண்டே இருப்பது? இவ்வாறாக அவர் கூறினார்.
மக்கள் நலன் கருதி வெளியிடுவது
பாஜெபசிங் (பொம்மிடி)
சமூக ஆர்வலர்.




