ஏழ்மையில் இறந்த சுமங்கலி பெண்ணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்
மே 07, திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மை தம்பதியினர் வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். வேலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் மனைவிக்கு பலத்த காயம் தலையில் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏழ்மையின் காரணமாக இறந்தவரின் புனித உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் இருப்பதாக மை தருமபுரி அமைப்பிற்கு தகவல் தந்தனர். ஏழ்மையில் இறந்த சுமங்கலி பெண்ணை மை தருமபுரி அமைப்பினர் தங்கள் சகோதரியாக எண்ணி பச்சியம்மன் கோவில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், கணேஷ், மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 210 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.




