மற்ற செய்திகள்

சாலையில் அடிபட்ட நிலையில் புள்ளிமானை தீயனைப்பு வீரர்கள் மீட்டு முதலுதவி செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

 சனவரி 08|மார்கழி 24




விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் நந்தக்கோட்டை என்ற இடத்தில் புள்ளிமான் ஒன்று அடிப்பட்ட நிலையில் சாலையில் கிடந்துள்ளது அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மான் அடிப்பட்டு பரிதாபமாக இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் நந்தக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் தகவல் பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர் 

அங்கு சென்று பார்த்த போது மான் கால் மற்றும் தலை பகுதியில் அடிப்பட்டு இருந்துள்ளது விசாரித்து பார்த்த போது அந்த இடத்தில் புள்ளிமான் நடமாட்டம் அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில் சாலையை கடக்க அந்த மான் முயன்ற போது ஏதாவது ஒரு வாகனத்தில் அடிப்பட்டு இருக்கலாம் என மக்கள் கூறினார்கள் மயக்க நிலையில் இருந்த மான் முகத்தை பயப்படாமல் இருக்க துணியால் எங்கள் வீரர்கள் மறைத்து தீயணைப்பு வாகனத்தில் அந்த மானை எடுத்து கொண்டு தீயணைப்பு நிலையம் வந்து விட்டார்கள் 

பின்பு சின்ன சின்ன முதலுதவிகளை தீயணைப்பு வீரர்கள் அந்த மானிற்கு அளித்துள்ளார்கள் மான் சற்று எழுந்து நிற்க ஆரம்பித்து உள்ளது பின்பு வனத்துறை அதிகாரிகள் இடம் தகவல் கூறி உள்ளார்கள் அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானை எடுத்து சென்று விட்டனர் மானின் உயிரை காப்பாற்றிய  தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks