மற்ற செய்திகள்

ஆதரவு அற்று இறந்த வாலிபரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

 சனவரி  21|தை ‌ 07

தருமபுரி  21

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடலை நல்லடக்கம் செய்யும் புனிதமான சேவையை மை தருமபுரி அமைப்பினர் அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை, இவரது புனித உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். 


ஒகேனக்கல் காவல் நிலைய காவலர் கோவிந்தராசு, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமைப்பாளர்கள் சையத் ஜாபர், கிருஷ்ணன், கார்த்திகேயன், சிவன் திருவடி சேவை குழு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம்  இது வரை 190 புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆத்மாத்ம சாந்தி பூஜை செய்துள்ளனர்.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks