மற்ற செய்திகள்

நன்பரின் மகள் 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் போக்சோவில் கைது

பங்குனி 03|செவ்வாய்கிழமை

மார்ச் 17|கன்யாகுமரி 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 6-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 44 வயதுடைய அலெக்ஸ் என்ற மீனவர், குளச்சல் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற அலெக்ஸ், அங்கு வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மகளான 6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

மகளின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த அலெக்ஸ் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks