மற்ற செய்திகள்

2025 தேசிய தன்னார்வ இரத்ததான நாள் பாராட்டு பெற்ற மை தருமபுரி அமைப்பினர்

 அக்டோபர் 13|புரட்டாசி 27

தருமபுரி,


2024 ஆம் ஆண்டு தருமபுரி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்ததான முகாம் நடத்தி கொடுத்து தேவைப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு இரத்தம் அளித்து அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்ததற்கு மை தருமபுரி அமைப்பிற்கு அரசு மருத்துவமனை குருதி வங்கி சார்பாக பாராட்டினர். அவசர இரத்ததான உதவி, இரத்ததான முகாம், பல புதிய இரத்த கொடையாளன்களை ஊக்குவித்து இரத்ததானம் கொடை வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பாராட்டு சான்றிதழை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ்.,இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகர், குருதி வங்கி மருத்துவர் கன்யா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சையத் ஜாபர், சண்முகம், தன்னார்வலர்கள் அம்பிகா, நித்யா ஆகியோர் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks