மற்ற செய்திகள்

புரட்சிகர மக்கள் அதிகாரம் கட்சி முன்னெடுத்த தெருமுனை கூட்டம் நிகழ்வு – கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு விஜய்யை கைது செய்

பென்னாகரம் அக்டோபர் 07|புரட்டாசி 21

கரூர் 42 பேர் படுகொலை TVK தலைவன் விஜய் உள்ளிட்டோரை கொலை வழக்கில் கைது செய், என்கிற தலைப்பில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நகரத்தில் 7.10.2025 காலை 11.00 மணிக்கு பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து BDO அலுவலகம் அருகில், இந்திரா நகர் 4 ரோடு, போடூர் 4 ரோடு உள்ளிட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

தோழர் மாரியப்பன், வட்டார துணை செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் சிவா, மாவட்ட செயலாளர், தோழர் அருண், மாநில பொருளாளர், தோழர் கோபிநாத் மாநில இணைச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக தோழர் சத்தியமூர்த்தி வட்டார குழு உறுப்பினர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

கார்ப்பரேட் கவர்ச்சிகரமான அரசியல், சினிமா சீரழிவு, ஓட்டுக் கட்சிகளின் கூட்டங்களுக்கு பிரியாணி, பணம் உள்ளிட்டவற்றை புறக்கணித்து, மக்களுக்கு தேவையான சமூக மாற்றம் கொண்ட வர்க்க அரசியல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு  பகத்சிங் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அரைக்கூவல் விடுத்து இந்த தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன.

நடைபெற்ற நான்கு இடங்களிலும் மக்கள் பரவலாக நின்று கவனித்தனர். பொது மக்களிடம் பிரசுரங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டன.

– தோழர் மாரியப்பன், வட்டார துணைச் செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டம்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks