மற்ற செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட மை தருமபுரி NGO, அறம் அறக்கட்டளை அமைப்பினர்

 நவம்பர் 20|கார்த்திகை 04

தருமபுரி 


தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரிந்து வந்துள்ளார். பொதுமக்கள் பலரும் இவரை மீட்க மை தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டனர். இன்று காலை இவரை பெண் காவலர்கள் மூலம் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவில் மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் ப்ரிதா முன்னிலையில் சேர்க்கப்பட்டார். இந்த பெண்மணி தனது பெயர் மஞ்சுளா என்றும் தெலுங்கு மொழியில் பேசுகிறார். இவர் யாரென்று தெரியவில்லை. மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அறம் அறக்கட்டளை ரமேஷ், பெண் காவலர்கள் மயில், தாமரைச்செல்வி ஆகியோரை மருத்துவர் பழனியப்பன் அவர்கள் பாராட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks