மற்ற செய்திகள்

ஆதரவற்றும் ஏழ்மையில் இருந்தோரின் இரண்டு புனித உடல்களை இன்று நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

டிசம்பர் 24|மார்கழி 09



185 ஆவது புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மை தருமபுரி அமைப்பு (NGO)



தருமபுரி 


தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்யும் சேவை பணியை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் செய்து வருகின்றனர். மொரப்பூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் ரயில்வே காவல்துறையினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை தருமபுரி அரசு மருத்துவமனையில் வைத்தனர். அதே போன்று பாப்பாரப்பட்டி பகுதியில் ஏழ்மையில் இறந்த சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் காவல்துறை உதவியுடன் மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மொரப்பூர் காவல் நிலைய காவலர் தேவராஜ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 185 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks