மற்ற செய்திகள்

சீருடைப் பணியாளர் இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் திறனாய்வு தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் துவங்கப்பட்டது

 சனவரி 28|தை 14







திருநெல்வேலி,


திருநெல்வேலியில் இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் திறனாய்வு தேர்வு இன்று துவக்கம். ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர்திரு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள் / சிறை காவலர்கள் / தீயணைப்பாளர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 935 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 27.01.2026 முதல் 30.01.2026 வரை உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு நடத்தப்படவுள்ளது.

அதன்படி, (27.01.2026) ம் தேதி 460 விண்ணப்பதாரர்களும்,  (28.01.2026) ம் தேதி 475 விண்ணப்பதாரர்களும்  அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு (400 மீட்டர் ஓட்டப்பந்தயம்) நடத்தப்பட்டு இரண்டு நாட்களில் உடல் தகுதி தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் 29.01.2026 மற்றும்‌ 30.01.2026 ஆகிய தேதிகளில் உடல் திறனாய்வு தேர்வு (Physical Efficiency Test) நடத்தப்பட உள்ளது. 

இத்தேர்வுகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட தேர்வு மையத்திற்காக சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்  முனைவர். நெ.மணிவண்ணன்,இ.கா.ப.அவர்கள் மேற்பார்வையில்  திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் திரு.S.விஜயகுமார் (தலைமையிடம்) அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம்  26.01.2026 ம் தேதி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் ஆய்வு  செய்தனர். 

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட காவல் ஆளினர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், இத்தேர்வு பணிக்காக  120 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks