மற்ற செய்திகள்

தருமபுரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து:

தருமபுரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி கிராமப் பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதிக வேகத்துடன் முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பயணிகள் காயமடைந்தனர் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை விபத்து நடந்தவுடன் உள்ளூர் பொதுமக்களும் காவல் துறையினரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தினால் பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரிமங்கலம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks