மற்ற செய்திகள்

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 15/11/2025 மாலை 7.00 மணிக்கு காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

 நவம்பர் 16|ஐப்பசி 29

காரிமங்கலம்

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று 15/11/2025 மாலை 7.00 மணிக்கு காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படியும்,

மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.K.மனோகரன், Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd, அவர்கள்மாண்புமிகு கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்* 09.11.2025 அன்று சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (S.I.R) பற்றி காணொலி காட்சி வாயிலாக வாக்குச்சாவடி முகவர்கள் செயலாற்றுவது பற்றி வழங்கிய ஆலோசனைகள் குறித்தும், Special Intensive Revision (SIR) திருத்தத்தை 04.11.2025 அன்று முதல் நடைமுறைபடுத்துவது குறித்தும். மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை “எளியோரின் எழுச்சி” நாளாக கொண்டாடுவது குறித்தும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் மாநில,மாவட்ட ஒன்றிய பேரூர், கழக செயலாளர்கள், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக வழக்கறிஞர்கள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks