தருமபுரிமாவட்ட செய்திகள்

மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதானம் சேவை ஆறாம் ஆண்டு துவக்க விழா

 

ஏப்ரல் 14, தருமபுரி

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை கடந்த 13 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டம், பிற மாநிலங்களில் மனிதநேயத்துடன் தொடர்ந்து செய்து வருகின்றனர். தருமபுரி அரசு மருத்துவமனை அருகே தினந்தோறும் அன்னதானம், ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம், அவசர ரத்ததானம் தேவை, மாற்றுத்திறனாளிக்கு உதவுதல், பேரிடர் கால உதவி, மணீஷ் மருத்துவ சேவை திட்டம் போன்ற மனிதநேயமிக்க திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று அன்னதானம் சேவை திட்டம் முதன்முதலில் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்று தொடங்கப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவால் தற்போது ஆறாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக தொடங்கப்பட்டது.இதற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பத்திரிகையாளர் பிரேம், சபரிராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மை தருமபுரி நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், கணேஷ், தன்னார்வலர்கள் அலெக்சாண்டர், விமலேஷ், காதர் ஆகியோர் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை ஒருங்கிணைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks