தருமபுரிமாவட்ட செய்திகள்

தகடூர் தங்கத் தாரகை, கூந்தல் தான காரிகை, தகடூர் மனிதநேயர் விருதுகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பு

 பிப்ரவரி-28|மாசி 16




தருமபுரி,


உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தில் மை தருமபுரி விருதுகள் 2026 நிகழ்ச்சி நடத்திய மை தருமபுரி அமைப்பு. இந்த தினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூந்தல் தானம் வழங்கியோருக்கு கூந்தல் தான காரிகை, கூந்தல் தான வேந்தன் விருதுகளும், இரத்ததானம் அளித்த பெண்கள், சாதனை பெண்களுக்கு தகடூர் தங்கத் தாரகை விருதும், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு தட்டணுக்கள் தானம் வழங்கிய நபர்களுக்கு தட்டணுக்கள் நாயகன் விருதும், இந்த சமுதாயத்தில் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆண்களுக்கு தகடூர் மனிதநேயர் விருதும், மை தருமபுரி அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு உதவி வரும் பாராமெடிக்கல் கல்லூரி நிர்வாகத்திற்கும் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கும் விழா நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில், கயல் குழுமம் நிர்வாக இயக்குனர் அறிவழகன், பிஜிஆர் மருத்துவமனை ராஜேஷ், குழந்தைகள் மருத்துவர் தீபக், பூக்கடை ரவி மருத்துவமனை மருத்துவர் அசோகன், TAMS சுரேஷ் சுப்பிரமணியன், டெர்பி ஷோரூம் நரேந்திரன், ரயில்வே ஒப்பந்ததாரர் பரமசிவம், மாருதி ரத்த வங்கி வெங்கடாசலம், செந்தில் குமார் டிப்பார்ட்மென்ட் கார்த்திக் குமார், ஆடிட்டர் தேவராஜ், PSB டிப்பார்ட்மென்ட் சுரேஷ், நடிகர் கதிரவன், ஸ்ரீ சரவணா எலக்ட்ரிக்கல்ஸ் ராகவ் திலக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். FUVISION உதயகுமார், பத்திர எழுத்தர் கணேசன், மணிகண்டன் சினி டெக்கரேசன் மணிவேல், அன்வி பொட்டிக் ராம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



விழாவினை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா வரவேற்றார், பொருளாளர் ஜலபதி ராஜா, மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், சையத் ஜாபர், விஜயகாந்த், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், காதர், மூர்த்தி, சபரி, கார்த்திக், பிரேமா, அம்பிகா, இந்திரா, காயத்ரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முதுநிலை ஆசிரியர் சௌந்தரராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், புகைப்பட கலைஞர் மித்ரா மீடியாஸ் அலெக்சாண்டர் கலந்து கொண்டார். தருமபுரி ஸ்ரீ மியூசிக் அகாடமி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks