மற்ற செய்திகள்

ஆதரவற்று ஏழ்மையில் இறந்த முதியவரின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

 நவம்பர் 23|கார்த்திகை 07


தருமபுரி 

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டாசு புறவடை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பல மாதங்களாக சாலையோரம் சுற்றி திரிந்துள்ளார், வயது முதிர்வின் காரணமாக இயற்கை மரணம் அடைந்து சாலையோரம் கிடந்துள்ளார். இவரது புனித உடலை மீட்டு விசாரித்ததில் இவரை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இன்று அதியமான் கோட்டை காவல் நிலைய காவலர் ராமர், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர் கணேஷ், மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் உறவாக எண்ணி முதியவரின் புனித உடலை நல்லடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 175 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks