தருமபுரிமாவட்ட செய்திகள்

ரயிலில் அடிபட்டு ஏழ்மையில் இறந்த ஆணின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

பிப்ரவரி 01|தை 18

 

தருமபுரி 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகாணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன், 40 வயதுடைய ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்துள்ளனர், இவரது புனித உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மை தருமபுரி அமரர் சேவை மூலம் பச்சியம்மன் கோவில் மயானத்தில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டார். 

தருமபுரி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராசு, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 191 ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.



​செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks